அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால், நாட்டில் சிலர் கதறுகின்றனர், பதறுகின்றனர், பயம் கொள்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பரிசுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியிவ் பேசிய அவர்,வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வரலாற்றில் இடம் உண்டு என்றார். ஆனால், வேடிக்கை பார்த்தவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் வரலாற்றில் இடம் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் பேச கூடாது என்றும் இறங்கி செய்ய வேண்டும் என்பதை நம்புபவன் தாம் என்றும் அமைச்சர் கூறினார். இன்றைய நாட்டு நடப்பில் அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால் கதறுகிறார்கள், பதறுகிறார்கள், பயப்படுகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர் அன்பில், நிரூபித்து விடுவார்களோ என்று நினைக்கக் கூடிய கவலையான சூழல் தான் அதிகம் உள்ளது என்றார். தற்போது இருக்கும் ஜென்ஜி தலைமுறையினர் தொழில்நுட்பங்களை ஏற்று செயல்படுவதாகவும் வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் தான் நமக்கு சவால் உள்ளது என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொருத்த வரையில், எவ்வளவு அறிவுப்பூர்வமாக கேள்விகளை கேட்கிறோம் என்பதில் தான் நமக்கான பதில் கிடைக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்பதற்காக நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளாா்.
வடக்கனை கதறவிட்ட சோழன்! வசமாக சிக்கிய மோடி! ஆதாரங்களுடன் உமாபதி!