spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவடக்கனை கதறவிட்ட சோழன்! வசமாக சிக்கிய மோடி! ஆதாரங்களுடன் உமாபதி!

வடக்கனை கதறவிட்ட சோழன்! வசமாக சிக்கிய மோடி! ஆதாரங்களுடன் உமாபதி!

-

- Advertisement -

சோழ மன்னர்கள் பாரத தேசத்தின் அடையாளம் என்று பிரதமர் மோடி சொல்வது உண்மைக்கு புறம்பானது என்றும், சுதந்திரத்திற்கு பின்னரே பாரதம் என்கிற கருத்து ஏற்பட்டதாகவும் பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை குறித்தும், அதில் சோழ மன்னர்கள் குறித்து அவர் பேசிய வரலாற்றுக்கு புறம்பான கருத்துக்கள் குறித்தும் வரலாற்று ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரதமர் மோடி தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் பிரதமர் மோடி ரோடு ஷோவுக்கு, அவர் மேடையிலேயே வாய்ஸ் ஓவர் கொடுக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதாக சொல்கிறார். ஆபரேஷன் சிந்தூருக்கும், அரியலூருக்கும் என்ன தொடர்பு உள்ளது? பிரதமர் என்பதால் மக்கள் பார்க்க வந்தனர். அதை ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட வந்ததாக சொல்கிறார். ராஜராஜ சோழன் ஆண்ட கங்கைகொண்ட சோழபுரம் என்பது, போதிய வளர்ச்சி இல்லாத பகுதியாகும். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் அந்த கோவில் பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. அது ராமேஸ்வரம், திருச்செந்தூர் கோவில்களை போன்று பிரசித்தி பெற்ற தலமாக விளங்கவில்லை. அது ஒரு தொல்லியல் துறை அடையாளமாக தான் விளங்கியது. நான் தடம் பதித்த தமிழன் ஆவணப்படத்திற்கான ஆய்வுகளுக்காக 2015-2016 கால கட்டத்தில் சென்றபோது அந்த பகுதி எந்தவிதமான வளர்ச்சியும் இல்லாத நிலையில் இருந்தது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்தில், பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து சொல்ல வந்தனர் என்று சொல்கிறார்கள். அறிவு திருட்டு, சூழ்நிலைத்திருட்டு, வரலாற்று திருட்டை தான் பிரதமர் மோடி செய்துள்ளார்.

சோழர்கள் பாரத தேசத்தின் அடையாளம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அவர் ஒரு மிகப்பெரிய இந்து மத தலைவர் போன்று மாற்ற முயற்சிக்கின்றனர். சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரையே திருட முயன்றவர்கள் தான் பாஜகவினர். அதேபோல் காமராஜரையும், எம்.ஜி.ஆரையும் தங்களுக்குரியவர்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றால் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் ஆகிவிடுவாரா? தற்போது ராஜேந்திர சோழனையும் திருட முயற்சிக்கிறார்கள். அவர் ஒரு இந்து. அதனால் தான் மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளின் மீது படையெடுத்து சென்றார் என்று சொல்கிறார்கள். ராஜேந்திர சோழன் மேற்குவங்க மாநிலத்தில் பாயும் கங்கை நதியின் நிலப் பரப்பினை கைப்பற்றினார். கடாரம் என்பது தற்போதைய மலேசியாவை குறிக்கும். அதனுடைய அப்போதைய பெயர் ஸ்ரீவிஜயா பேரரசு. தாய்லாந்துக்கு நேராக கம்போடியா உள்ளது. அங்கு கெமர் பேரரசு ஆட்சி செய்தது. தஞ்சையில் இருந்து புறப்பட்டு சீனாவின் எல்லை வரை ராஜேந்திரச் சோழன்  சென்றுள்ளார். அத்துடன் தற்போதைய மகாராஷ்டிரா, அப்போது கல்யாண் என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அதுவரை ராஜேந்திர சோழன் வெற்றிபெற்றுள்ளார். அவருடைய 4வது மகனான ராஜாதிராஜன் கல்யாணில் தான் கொல்லப்படுகிறார்.

தமிழர்களுக்கும், மராத்தியர்களுக்குமான தொடர்பு வேறு. அப்போது இருந்த பெயர் மேலை சளுக்கிய நாடு. கீழை சாளுக்கிய நாடு ஆகும். ராஜேந்திர சோழனின் மகளுக்கே, சாளுக்கிய நாட்டில் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவர்களை வென்று பெண் கொடுக்கிறார். அப்படிபட்ட ராஜேந்திர சோழனை, பிரதமர் மோடி தன்வயப்படுத்தப் பார்க்கிறார். அவரும் ஒரு சனாதனவாதி. சிவன் கோவில் கட்டியிருக்கிறார். வடக்கர்கள் சுதந்திரத்திற்கு பிறகுதான் யார் என்றே தெரிகிறது. தமிழர்களுக்கான வரலாறு என்பது எங்கோ உள்ளது. வடக்கர்கள் கடல் தாண்டி எங்கும் போனது கிடையாது. ராஜராஜ சோழன், கடல்தாண்டி  சீன எல்லைவ ரை போனவர் ராஜராஜன். சீன மன்னர்களால் பாராட்டப்பட்டு, கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கிறது. ராஜேந்திர சோழன் காலத்தில் அந்த தொடர்புகள் கைவிடப்பட்டன. பல்லவர் காலம் முதலே தமிழ்நாட்டிற்கும், சீனாவுக்கும் தொடர்பு உள்ளது. அது சோழர்கள் காலத்தில் விரிவடைந்தது. அதனால் தான் ஜீஜின் பிங் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார். அவ்வளவு பெரிய கடலையே ஆண்ட மன்னர்களின் தஞ்சை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. மத்திய அரசு சோழர்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால், தஞ்சையை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் பிரதமர் மோடி, ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் திருடுவதற்காக வருகிறார்.

ராஜேந்திர சோழன் காலத்தில் இந்தியா என்கிற நாடே கிடையாது. சுதந்திரத்திற்கு பிறகுதான் அந்த பெயர் வருகிறது. அப்போது பாரத தேசம் என்கிற கருத்தே கிடையாது. தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தில் ராமாயண கதைகள் இருந்ததற்கான ஆவணங்களே கிடையாது. மூவேந்தர்களும், ராமாயணத்தை பற்றி பேசியதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் சிவன், முருக கடவுள்கள் குறித்து பேசியுள்ளனர். சோழர்களை மோடியுன் ஒப்பிட்டு நரேந்திர சோழன் என்கிறார்கள். தமிழ் மன்னர்களை கொண்டு போய் யாருடன் சென்று ஒப்பிடுகிறார்கள். பாஜகவினர் சொல்வது போல அப்போது முகலாய எதிர்ப்பு என்பது கிடையாது. நல்ல வேளையாக ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் அவை நடக்கவில்லை. இல்லாவிட்டால் இஸ்லாமியர்களை படையெடுத்து விரட்டியவர் ராஜேந்திர சோழன் என்று சொல்லியிருப்பார்கள்.

விவாதப் பொருளான அல்லு அர்ஜுன் கைது விவகாரம்..... அரசியல் பழிவாங்கும் நோக்கமா?

வடஇந்தியாவில் தற்போது வரலாற்று திரிபுகளுடன் நிறைய படங்களை எடுக்க தொடங்கி விட்டார்கள். கஜினி முகமது படையெடுத்து வந்தபோது சோழர்கள் எதிர்த்தார்கள் என்று கற்பனையாக படம் எடுத்து மக்களை நம்ப வைக்கிறார்கள். பவன் கல்யாண் நடித்துள்ள வீரமல்லு திரைப்படம், இந்துக்களின் கிராமங்களை முஸ்லீம்கள் அழிப்பதாகவும், ஒரு இந்து திருடன் அவர்களை காப்பாற்றுவதாகவும் படம் உள்ளது. அவுரங்கசீப்பிடம் இருந்த கோஹினுர் வைரத்தை எடுத்து மக்களுக்கு தானமாக வழங்குவதாக சொல்கிறார்கள். வரலாற்றில் நடக்காத ஒன்றை படமாக எடுக்கிறார்கள். பிரதமர் மோடியே இதைதான்  செய்கிறார். கங்கைகொண்ட சோழபுரம் விழாவுக்கு வந்துவிட்டு, ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக மக்கள் கூடினார்கள் என்று சொல்கிறார். இது வரலாற்றில் எப்படி பதிவாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ