பாரா மெடிக்கல் எனும் மருத்துவம் சார்ந்த துணை பட்டபடிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் B.Sc நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி உள்ளிட்ட 19 வகையான 4 வருட பட்டப்படிப்புகளுக்கும், பார்ம் டி ( Pharm D) 6 வருடம் மற்றும் 3 வருட பட்டப்படிப்புகளுக்கும், செவிலியர் பட்டயபடிப்புக்கும் ஜூலை 30 ந் தேதி முதல் ஆகஸ்ட் 2-ந் தேதி வரையில் ஆன்லைனில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்யலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் B.Sc நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி உள்ளிட்ட 19 வகையான 4 வருட பட்டப்படிப்புகளுக்கும், பார்ம் டி ( Pharm D) 6 வருடம் மற்றும் 3 வருட பட்டப்படிப்புகளுக்கும், செவிலியர் பட்டயப்படிப்புக்கும் ஜூன் 17 ந் தேதி முதல் ஜூலை 7 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவம் சார்ந்தப் படிப்புகளில் அரசு கல்லூரிகளில் 3,256 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 20,026 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 61,735 விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. பார்ம் டி ( Pharm D) 6 வருடப் படிப்பு சுயநிதிக் கல்லூரிகளில் 723 இடங்களும், பார்ம் டி ( Pharm D ) 3 வருடப் பட்டப்படிப்புகளுக்கு 61 இடங்களும் உள்ளன. செவிலியர் பட்டயப்படிப்பு அரசு கல்லூரிகளில் 2,080 இடங்கள் உள்ளன. செவிலியர் பட்டயப்படிப்புக்கு 16,746 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்டுள்ள முதல் சுற்றுக் கலந்தாய்வு அட்டவணையில், மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 20207 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் எனவும், ஆகஸ்ட் 4-ந் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் நீலிக் கண்ணீர் வடிக்கிறாரா? – .ஆர்.பி.ராஜா