spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு...

தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பு…

-

- Advertisement -

பீகாரில் ஒரு கோடிக்கு மேலான வாக்களா்கள் நீக்கப்பட்டதற்கு, தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சாா்பில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்  சந்திப்பு...மேலும், இது  குறித்து தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்கள் சந்திப்பில், பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் 62 லட்ச வாக்காளர்களை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் 1கோடிக்கு மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரினோம். ஆனால் ஆளும் கட்சி இசைவு தெரிவித்தால் தான் விவாதம் நடைபெறும் என அவைத்தலைவர் கூறி, எங்களது நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று இருக்கின்றனர்.

மேலும் இந்த சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதம் கோரி அவை மையப்பகுதிக்கு செல்ல முற்பட்ட போது சுமார் 25-க்கும் மேற்பட்ட  சி.ஐ.எஸ்.எஃப் காவலர்களை கொண்டு தடுத்து நிறுத்தினர். பெண் உறுப்பினர்களை கூட வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். ஏதே அசம்பாவிதம் நடப்பதையும், தீவிரவாத தாக்குதலை தடுக்கப்பவராகவும் போன்ற அச்ச உணர்வை ஏற்படுத்தினர். மொத்த 800 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில்  400க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக உள்ளனர். இதுஏதோ தீவிரவாத நடவடிக்கையை தடுப்பதற்கு வந்தது போல உள்ளது

we-r-hiring

நாடாளுமன்ற வளாகம் அவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று, இது வரை இல்லாத வகையில் இதுபோன்று பாதுகாப்பு படை வீரர்கள் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்தும் முறை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை நாடாளுமன்ற வளாக முழுவதும் சி எஸ் எப் காவலர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் இன்று அவையில் நுழைந்தது ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கை எடுப்பது போன்று இருந்தது.

இது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் ஒரு பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவதும், அச்சுறுத்துவதும்  ஜனநாயகம் எங்கே செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. பல்வேறு விவரங்களுக்கு இடையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள், உரிமைகள் பறிக்கப்படுகின்ற இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்

தற்போது ஆட்சி செய்கிறவர்கள் வருங்கால முழுவதும் ஆட்சியிலே இருப்பார்கள் என்பதை போன்று செயல்படுகிறார்கள் இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பிரச்சனையை எழுப்புவதாக கூறியிருக்கிறார்,வரும் திங்கட்கிழமை அவை தொடங்கியவுடன் இது தொடர்பான பிரச்சனை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளாா்.

ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்…

MUST READ