spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!

ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள்! அம்பலமான மோடியின் மோசடிகள்! உச்சநீதிமன்றம் விதித்த கெடு!

-

- Advertisement -

பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய மோசடிகளால், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை தர்ந்துவிட்டதாகவும், அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

பீகாரில் 62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது மற்றும் நாடு முழுவதும் பாஜக மோசடிகள் செய்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள், பெண்கள் ஆவர். குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்காளர்களை அதிகளவு நீக்கி உள்ளனர். ஜனநாயகத்தில் கடைசி மனிதனுடைய கடைசி ஆயுதம் என்பது வாக்குரிமையாகும்.  மோடி தமிழ்நாட்டிற்கு 10 முறை வருவதற்கு காரணம் அந்த வாக்குகளை பெறுவதற்காக தான். ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும், சாமானியனின் ஒரு வாக்கை யாசகம் கேட்டுதான் நீங்கள் அவனது வாயிலில் வந்து நிற்க வேண்டும். இஸ்லாமியர்களை காலி செய்வதற்காக சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற பலவற்றை கொண்டுவந்து விட்டனர்.

கடைசியாக வாக்குரிமையை வைத்துள்ளனர். 2008க்கு முன்பு பிறப்புக்கள் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாத பிறப்புகள் எல்லாம் இந்தியாவில் உள்ளனர் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றனர். எல்லோருக்கும் அத்தகைய ஆதாரம் உள்ளதா? பீகாரில் குழந்தை பிறப்பை பதிவு செய்யும் முறை 2011 வரை கிடையாது. மேலும், பிகார், உ.பி போன்ற மாநிலங்களில் இன்றும் பல பிரசவங்கள் வீடுகளில் தான் நடடைபெறுகிறது. 2009க்கு பிந்திய பிறப்புகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது, வாக்குரிமையை இழப்பதற்கான அடிப்படையாக உள்ளதாக  சொல்கிறார்கள்.

பீகாரின் கோபல்கஞ்ச் தொகுதியில் 17 சதவீதம் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களில் 14.36 சதவீதம் பேரை நீக்கிவிட்டனர்.38 சதவீதம் இஸ்லாமியர்கள் உள்ள புரியா தொகுதியில் 10.83 சதவீதம் பேரை நீக்கிவிட்டனர். அடுத்து 67 சதவீதம் இருக்கும் கிஷான் கஞ்ச் தொகுதியில் 10.75 சதவீதம் இஸ்லாமியர்களை நீக்கியுள்ளனர். சராசரியாக 15 சதவீதம் முதல் 82 சதவீதம் வரை குறிப்பிட்ட சமூக மக்களை நீக்கியுள்ளனர். மதுபானி தொகுதியில் 12 சதவீதம் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 9.37 சதவீதம் பேரை நீக்கிவிட்டனர். 17 சதவீதம் இஸ்லாமிய வாக்காளர்களை கொண்ட பகல்பூர் தொகுதியில் 9.53 சதவீதம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். இதனுடைய நோக்கம் என்பது இஸ்லாமியர்கள் வாக்களித்து, வெற்றி பெறமுடியும் என்று தொகுதிகளை கண்டறிந்து காலி செய்துவிட்டனர். இதேபோல் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பார்த்தோம் என்றால் ராஜ்பூரில் 31 சதவீதம் வாக்காளர்களில், 12 சதவீதம் பேரை நீக்கியுள்ளனர். ஆமுர், நோஹா போன்ற தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமுதாய வாக்குகளை பெரும்பான்மையானவர்களை நீக்கியுள்ளனர்.

மத்திய பெங்களுரு தொகுதியில் எப்படி ஒரு லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்தார்களோ, அதுபோல பீகாரில் போலி வாக்காளர்களை சேர்ப்பதற்கான கதவுகளை திறந்துவிட்டு உள்ளனர். இனிமேல் இவர்கள் தேர்தலே நடத்தப்போவது கிடையாது. அவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ, அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாயில்கதவுகளை திறந்துவிட்டனர். மற்ற அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டார். பீகாருடைய எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய வாக்கை காணவில்லை என்று சொல்கிறார். இரண்டு தொகுதிகளில் தேஜஸ்வியின் பெயர் இரருந்ததால் நீக்கியதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. அதற்குரிய ஆணங்களை தேஜஸ்வி கேட்டபோதும், அவர்கள் வழங்கவில்லை. ஆனால் ராகுல்காந்தி வெளியிட்ட ஆவணங்களில் ஒரே நபருக்கு உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகாவில வாக்குரிமை உள்ளது. ஏற்கனவே 3 இடங்களில் வாக்களித்த நபரை நீங்கள் நீக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவரை நீக்கிவிட்டீர்கள். இரண்டு இடங்களில் இருந்த வாக்குரிமைகளில் ஒன்றை தானே நீக்க வேண்டும். ஏன்  இரண்டையும் நீக்கினார்கள்.

தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தப் போகிறது என்பதற்கு இந்த முன்னோட்டங்கள் எல்லாம் சாட்சியாகி உள்ளது. அனைத்து தரப்பு வாக்காளர்களையும் உள்ளடக்கியதுதான் தேர்தல். அனைவருக்கும் ஒரே வாக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்களுக்க வாக்கு இல்லை என்று சொல்கிறது. இதன் முலமாக இந்த தேர்தல் யாருக்கான தேர்தல்?  எதை மையப்படுத்தி தேர்தல் நடைபெறுகிறது என்று  தேர்தல் ஆணையம்தான் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துவிட்டது. தேர்தல் ஆணையம் என்கிற கட்டமைப்பை கலைத்துவிட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதற்குண்டான வேலைகளை உடனடியாக தொடங்குவதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான பணியாகும். இதை மக்கள் இயக்கமாக நடத்துவதை தவிர வேறு வழியில்லை. ராகுல் அறிவிப்பு வெளியாகிய பின்னர் எனக்கு தோன்றுவது, இது புரட்சியாக மாறி, மக்கள் இயக்கமாக நடத்தப்பட வேண்டும். மோடி கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடித்துவிட்டார். இவர் ஜனநாயக வழியில் வந்த பிரதமர் அல்ல என்பதை ராகுல்காந்தியின் கணக்கு உணர்த்தியுள்ளது. பீகார் அதற்கு  சாட்சி பகிர்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ