ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தாமா படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் படு பிஸியான நடிகையான இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். தற்போது இவர் ஹாரர் படம் பக்கம் திரும்பி உள்ளார். அதன்படி ராஷ்மிகா நடித்துள்ள ஹாரர் படத்திற்கு ‘தாமா‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்க முஞ்சா, ஸ்ட்ரீ ஆகிய படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து ஆயுஷ்மான் குர்ரானா, பாரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அதன்படி தற்போது இந்த படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சச்சின் ஜிகார் இதற்கு இசையமைக்க சௌரப் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.