டியூட் படக்குழு தீபாவளிக்கு வருவதை மீண்டும் உறுதி செய்துள்ளது.தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். அடுத்தது இவரது நடிப்பில் ‘எல்ஐகே’ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படம் 2025 அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், ‘டியூட்’ எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க கீர்த்திஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படமானது பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாகும். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதால் ‘டியூட்’ படத்தின் ரிலீஸ் தீபாவளியில் இருந்து ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியானது.
தற்போது ‘டியூட்’ படக்குழு இன்று (ஆகஸ்ட் 22) மாலை 6.03 மணி அளவில் முக்கிய அப்டேட் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆவதை படக்குழு மீண்டும் உறுதி செய்திருக்கிறது. எனவே இன்று மாலை வெளியாகும் அப்டேட்டானது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டியூட் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -