spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னைக்காவது நான் ஃபீல்ட் அவுட் ஆனாலும்... எமோஷனலாக பேசிய அனிருத்.... கண்கலங்கிய SK!

என்னைக்காவது நான் ஃபீல்ட் அவுட் ஆனாலும்… எமோஷனலாக பேசிய அனிருத்…. கண்கலங்கிய SK!

-

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத், மதராஸி பட விழாவில் எமோஷனலாக பேசியுள்ளார்.என்னைக்காவது நான் ஃபீல்ட் அவுட் ஆனாலும்... எமோஷனலாக பேசிய அனிருத்.... கண்கலங்கிய SK!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அனிருத். இவருடைய இசை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. அந்த வகையில் இவர் இன்றைய தமிழ் சினிமாவின் ‘ராக்ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இளம் வயதிலேயே உலக அளவில் புகழ்பெற்ற அனிருத் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அடுத்தது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இது தவிர தெலுங்கு, இந்தியிலும் கலக்கி வருகிறார் அனிருத். இந்நிலையில் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மதராஸி’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

we-r-hiring

அப்போது மேடையில் பேசிய அனிருத், “சிவாவுடன் இது எனக்கு எட்டாவது படம். நாங்க ரெண்டு பேருமே ஒரே நேரத்தில் சினிமாவில் வளர்ந்தோம். என்னுடைய முதல் ஹிட் ‘எதிர்நீச்சல்’ படம். ஒரு நாள் நானும் ஃபீல்ட் அவுட் ஆவேன். அப்படி ஃபீல்ட் அவுட் ஆனாலும், என் சிவகார்த்திகேயன் ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி” என்று எமோஷனலாக பேசியுள்ளார். அனிருத்தின் இந்த பேச்சைக் கேட்டு மேடையின் கீழ் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ