நடிகர் மணிகண்டன் இயக்குனராக வேண்டும் என்று, தான் ஆசைப்படுவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதாவது எதார்த்தமான நடிப்புதான் அவருடைய பலம் என்று சொல்லலாம். எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார் மணிகண்டன். இவர் ஜெய் பீம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே மணிகண்டனுக்கு அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக அமைந்தது மட்டுமல்லாமல் நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இது தவிர மணிகண்டன் இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதே சமயம் புதிய படம் ஒன்றை அவரே இயக்கி நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், மணிகண்டன் இயக்குனராக மாற வேண்டும் என்பது தன்னுடைய ஆசை எனக் கூறியுள்ளார்.
Some actors are qualified to be directors.
– Now #RaviMohan Sir has taken a step in that line. #Karthi Sir may come next. #Manikandan, you should direct the film.
– #SivaKarthikeyan
pic.twitter.com/spUSTTI4NW— Movie Tamil (@_MovieTamil) August 26, 2025

அதாவது இன்று (ஆகஸ்ட் 26) நடிகர் ரவி மோகனின் புதிய தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் திறப்பு விழா சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் மேடையில், “ரவி சாருக்கு இயக்குனராகும் திறமை இருக்கிறது. அவரை அடுத்து கார்த்திக்கு இருக்கிறது. அதன் பிறகு அடுத்த ஜெனரேஷனில் நடிகர் மணிகண்டனிடம் இயக்குனராகும் திறமையை பார்க்கிறேன். அவர் விரைவில் டைரக்டராக மாறிவிடுவார். அவர் டைரக்டராக வேண்டுமென்பது என் ஆசை” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.