சென்னையில் மருந்துக் கடைக்குள் கொள்ளையா்கள் புகுந்து அரவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளாா்கள்.
சென்னை ஆயிரம் விளக்கில் மருந்து கடை ஒன்றில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை கொள்ளையா்கள் பறித்துக் கொண்டு சென்றனா். இந்த கொள்ளையா்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பணத்தினை பறித்துக் கொண்டு சென்றுள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்ட புகாாின் பேரில் காவல் துறையினா் கொள்ளையா்கள பிடிக்ககும் முயற்சியில் ஈடுபட்டனா். தப்பித்து ஓடிய கொள்ளையா்களை பரபரப்பான தேனாம்பேட்டை சிக்னலில் போலீசாா் மடக்கிய போது மூன்று பேர் தப்பினர்.
ஆனால், மானாமதுரை சேர்ந்த ஆதித்யா என்ற ஒரு கொள்ளையனை போலீசாா் மடக்கி பிடித்து கைது செய்தனா். மேலும் கொள்ளையனிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் அாிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாாிடமிருந்து கொள்ளையன் ஆதித்யா தப்பிக்க முயற்சிக்கும் போது கை எலும்பு முறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் என்ற பெயரில் சீரழியும் இளம் தலைமுறையினர்…சட்டவிரோத கருகலைப்பால் சிறுமி பலி



