கூலி படத்தில் இடம்பெற்ற ‘சிக்குடு’ பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இப்படம் வெளியானது. இதற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சௌபின் ஜாகிர், நாகார்ஜுனா, ரச்சிதா ராம், உபேந்திரா, அமீர்கான் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் லாஜிக் மிஸ்டேக்குகள் காரணமாக ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. எனவே ஆரம்பத்தில் லோகேஷ் – ரஜினி கூட்டணியிலான இந்த படம் கோலிவுட்டில் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.
Sound-ah yethu!📣 Here’s the exclusive BTS of #Chikitu from #Coolie💥#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica @monishablessyb @anbariv… pic.twitter.com/B4GFyhK8iw
— Sun Pictures (@sunpictures) September 2, 2025

அடுத்தது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘சிக்குடு’ பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.