spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமெகா பிளாக்பஸ்டர் கிரைம் திரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

மெகா பிளாக்பஸ்டர் கிரைம் திரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

-

- Advertisement -

நடிகர் விக்ரம் மெகா பிளாக்பஸ்டர் கிரைம் திரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மெகா பிளாக்பஸ்டர் கிரைம் திரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

தமிழ் சினிமாவில் சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரம் கடைசியாக ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது படத்திலும், ‘மெய்யழகன்’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தனது 64வது படத்திலும், ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 65 ஆவது படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் விக்ரமின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகர் விக்ரம், இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.மெகா பிளாக்பஸ்டர் கிரைம் திரில்லர் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்!

we-r-hiring

இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றார். இந்த படம் தரமான க்ரைம் திரில்லர் படமாக அமைந்து ரசிகர்களால் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து ‘இரண்டு வானம்’ எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராம்குமார், நடிகர் விக்ரமை இயக்கப் போகும் தகவலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ