spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்.... முதல் இடத்தை பிடித்து சாதனை!

ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்…. முதல் இடத்தை பிடித்து சாதனை!

-

- Advertisement -

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ‘மாநாடு’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது ‘ஜீனி’, ‘மார்ஷல்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்.... முதல் இடத்தை பிடித்து சாதனை! இதற்கிடையில் இவர், துல்கர் சல்மானின் வேப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதனை டோமினிக் அருண் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர்வுமன் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து நஸ்லேன், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்.... முதல் இடத்தை பிடித்து சாதனை! இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய அளவில் சிறந்த படமாக கருதப்படும் இந்த படத்தை 5 பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. இது தவிர இந்த படத்தின் மூலம் கல்யாணி பிரியதர்ஷனும் இந்திய அளவில் கொண்டாடப்படுகிறார். அதாவது 200 கோடி கிளப்பில் இணைந்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். ஷாருக்கானை மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்.... முதல் இடத்தை பிடித்து சாதனை!இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன், இந்த வாரத்திற்கான புகழ்பெற்ற இந்திய பிரபலங்களின் IMDb பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஷாருக்கான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கல்யாணி பிரியதர்ஷனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

MUST READ