spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

-

- Advertisement -

எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பிறந்த குழந்தைக்கு தொட்டில் வழங்கிய ஜெயக்குமார்.சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரில் இளைஞர் பாசறை சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாதவரம் மூர்த்தி திறந்து வைத்தார்கள்.

இதனை அடுத்து திருவொற்றியூரில் 14 இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாதவரம் மூர்த்தி வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

we-r-hiring

“எங்களுக்கு மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை
சிபிஐ குறித்த பயம் இல்லை வருமான வரித்துறை குறித்த பயம் இல்லை”

அதிமுக பெயரை குறிப்பிட்டு அண்ணாமலை பேசினால் அது குறித்து நான் பதிலளிக்கிறேன். அண்ணாமலை அதிமுகவின் பெயரை குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.

எந்த பட்டியலை வெளியிட்டாலும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்.
யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது என தெரிவித்தார். எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறினார்.எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் என தெரிவித்தார்

MUST READ