(செப்டம்பர் 12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று தாறுமாறாக மாறியுள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.90 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.10,240-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத புதிய உச்சமாக 1 சவரன் தங்கம் ரூ.82,000-ஐ நெங்கியுள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்களின் தங்கம் வாங்கும் கனவு கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தங்கத்தை போலவே, வெள்ளியும் இன்று கடுமையாக அதிகரித்துள்ளது. சில்லரை வற்பனையில் வெள்ளி கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் ரூ.142 க்கும், 1 கிலோ ரூ.1,42,000-க்கும் விற்பனையாகிறது.
விஜயின் திருச்சி பிளான்! பயப்படுகிறதா திமுக? எஸ்.பி. லெட்சுமணன் பேட்டி!
