பராசக்தி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ‘மதராஸி’ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். இதற்கிடையில் இவர்,சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்தின் இசையமைப்பாளராகவும் ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
பராசக்(தீ) பரவட்டும்🔥🔥
A stunning ride through history awaits#Parasakthi in Theatres from 14th January 2026@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya @supremesundar… pic.twitter.com/dCzBDn5AeC
— DawnPictures (@DawnPicturesOff) September 12, 2025

இந்த படமானது கடந்த 1950 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே மதுரை, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என ரசிகர்களும் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் டீசர் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.