நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது வாகனங்களில் யாரும் பின்தொடர்ந்து வரவேண்டாம். மரங்கள் மின் விளக்கு கம்பங்கள்,கொடிக்கம்பங்கள் உள்ளிட்ட உயரமான இடங்களில் ஏறக்கூடாது. சிலைகளை சுற்றி உள்ள பாதுகாப்பு கிரில், கம்பிகள், தடுப்புகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் உள்ள சகோதரிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரில் வருவதை திவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம். மக்கள் சந்திப்பு நடக்கும் இடங்களில் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சி தொண்டர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்க கண்ணியத்துடன் நடக்க வேண்டும் எனவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
அதிமுக கவுன்சிலரின் கார் உடைப்பு! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…


