இரிடியம் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதனை மதுரை சி பி சி ஐ டி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.இரிடியம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் 30 நபர்களை சி பி சி டி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம், தங்க நகைகள் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதன் என்பவரை சென்னை சி பி சி டி போலீசார் மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. மோசடி செய்த பணத்தில் மதுரையில் மூன்று வீடு, சென்னையில் ஒரு வீடு மற்றும் பல நிலங்களை சாமிநாதன் குவித்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி கிரிப்டோ கரன்சிகள் முதலீடு உள்ளிட்டவற்றை செய்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
மேலும் விசாரணையில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சாமிநாதன் சில துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் வைக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் மட்டும் பறிமுதல் செய்த நில பத்திரங்கள் உள்ளிட்டவற்றை முடக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட சிபிசிஐடி போலீசாரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் உள்ள இரிடியம் மோசடி வழக்கிலும் மதுரை சி பி சி ஐ டி போலீசார் சாமி நாதனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சாமி நாதனை இன்று மதுரை சிபிசிஐடி போலீசார் கூட்டத்தினர் காவலில் எடுக்க உள்ளனர்.

சென்னை சிபிசிஐடி போலீசார் சாமிநாதனின் மனைவி ராதா உள்ளிட்ட 5 பேரை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் நண்பர்கள் மூலமாக முதலீடு செய்தவர்களுக்கு பணம் கண்டிப்பாக திருப்பி அளிக்கப்படும் என, தொடர்ந்து கைதான பிறகும் நம்பிக்கையை ஏற்படுத்தி புகார் அளித்துவிடாமல் பாதிக்கப்பட்டவர்களை தடுத்து நிறுத்துவதாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிஸ் யூ அப்பா…. தம்பி உன்னை தேடுறான்ப்பா…. இந்திரஜா ரோபோ சங்கரின் உருக்கமான பதிவு!