spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமல்…மகிழ்ச்சியில் மக்கள்…

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமல்…மகிழ்ச்சியில் மக்கள்…

-

- Advertisement -

வீட்டு உபயோக பொருட்களான ஏசி, 32 Inch மேல் உள்ள டிவி உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமல்…மகிழ்ச்சியில் மக்கள்…ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்​தது. இதன்​படி, இனி 5% மற்​றும் 18% என இரண்டு அடுக்​கு​கள் மட்​டுமே இருக்​கும். ஏற்​கெனவே 28% வரி விதிப்​பின் கீழ் இருந்த 90% பொருட்​கள் 18% வரி விகிதத்​தின் கீழ் மாற்​றப்​பட்​டுள்​ளன. இதனால், உணவுப் பொருட்​கள், வாக​னங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள் உள்ளிட்ட பொருட்​களின் விலை கணிச​மாகக் குறைந்​துள்​ளது. அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், 32 Inchக்கு மேல் உள்ள LED டிவிக்களின் விலை 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அனைத்து வகை ஏசிக்களின் விலை 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது. Dishwasher விலை 5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. வீட்டு உபயோக பொருட்களில் குக்கர் விலை 300 ரூபாய் முதல் 3 ஆயிரம் வரை குறைந்துள்ளது. குறைந்த விலையில் விற்கப்படும் டிவிக்கள், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள ஜிஎஸ்டி நடைமுறையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதே நிலை தொடர வேண்டும்.

நடிகை ராதிகாவின் தாய் வயது மூப்பு காரணமாக காலமானார்…

MUST READ