கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கருர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பிரச்சாரம் முடித்து புறப்பட்டபோது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் இடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் மயக்கம் அடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கருர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மயக்கமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.