spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைபுழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

-

- Advertisement -

சென்னை புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புழல் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  அதிரடி சோதனை!!சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், மகளிர் சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் கஞ்சா கடத்தல் உட்பட வழக்குகளில் கைதான 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல வழக்குகளில் உள்ள கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த கைதி மேரி பிரான்சிஸ்கோ என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் படி, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எதற்காக நடத்தினர், பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது பின்னர் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பெண் கைதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவி நடிக்கும் ‘கராத்தே பாபு’ பட ரிலீஸ் எப்போது?…. வெளியான புதிய தகவல்!

we-r-hiring

MUST READ