த.வெ.க தலைவர், நிர்வாகிகள் என யாரும் மக்களுக்கு உதவ வராதது, அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது” என திமுக எம்.பி.கனிமொழி விமர்சனம் செய்துள்ளாா்.சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்திருகக் கூடாது. இது யாரையும் பழிசொல்லவோ, குற்றம் சொல்லக்கூடிய நேரமோ இல்லை. இத்தைய சூழலில் மக்களுடன் நிற்க வேண்டும். யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். ”
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாமல், “தன்னுடைய பாதுகாப்பை மட்டும் கருதி அங்கிருந்து விலகியது, நான் இதுவரை பார்த்ததல்லாத ஒரு செயல். ஒரு பொறுப்புள்ள தலைவர் அந்த இடத்தை விட்டு சென்றாலும், அடுத்த நிலை நிர்வாகிகள் அந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.

த.வெ.க தலைவரும், நிர்வாகிகளும் சம்பவ இடத்தில் மக்களுக்கு எந்தவொரு உதவியும் வழங்காதது, அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது என்று தெரிவித்தாா். மேலும், கரூரில் மக்களுடன் நின்றது திமுக அரசுதான் என்றும், எனவும் மக்கள் நலனில் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளாா்.
சூர்யா தொடங்க இருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்…. பெயரே எவ்வளவு அருமையா இருக்கு!