காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இயக்குனர் சங்கருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இருப்பினும் இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களுமே ஹை பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும் படு தோல்வியை சந்தித்தது. அடுத்தது சங்கர், ரன்பீர் கபூரை வைத்து அந்நியன் ரீமேக் படத்தை எடுக்க திட்டமிட்டார்.
ஆனால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் சங்கரின் இந்தியன் 3 திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என்பதே தெரியவில்லை. சூழல் இப்படி இருக்க இயக்குனர் சங்கர், அடுத்தது தனது கனவுத் திட்டமான ‘வேள் பாரி’ கதையை தழுவி புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டு இருந்தார். அதன்படி வேள் பாரி படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 2) பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இயக்குனர் சங்கருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் காந்தாரா படத்தை போல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதியிருந்த வேள் பாரி நாவலில் சொல்லப்பட்டதை போல் இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல், தொடர் தோல்விகளை சந்தித்து வேள் பாரியை மட்டுமே நம்பி இருந்த சங்கருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஷங்கர் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.