முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணியில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் முத்தையா. இவர் தற்போது தனது மகன் விஜய் முத்தையாவை வைத்து ‘சுள்ளான் சேது’ எனும் படத்தை இயக்கியுள்ளார். அதே சமயம் இவர், அருள்நிதி நடிப்பிலும் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அருள்நிதியுடன் இணைந்து அபிராமி, தான்யா ரவிச்சந்திரன், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு RAMBO என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது. எனவே இன்று (அக்டோபர் 4) மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இதனை படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது படமானது ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அருள்நிதி பாஸ்ராக நடித்திருக்கிறார். மேலும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அருள்நிதி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் டிமான்ட்டி காலனி 3 படத்தையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.