spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'காந்தாரா சாப்டர் 1'.... அப்போ ரூ.1000 கோடி கன்ஃபார்ம்!

பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’…. அப்போ ரூ.1000 கோடி கன்ஃபார்ம்!

-

- Advertisement -

காந்தாரா சாப்டர் 1 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'காந்தாரா சாப்டர் 1'.... அப்போ ரூ.1000 கோடி கன்ஃபார்ம்!கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. எனவே இதைத்தொடர்ந்து வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் நாளுக்கு நாள் அதிக வசூலையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது. பிரம்மாண்டமாக பல்வேறு மொழிகளில் திரையிடப்பட்ட இந்த படம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். கிளைமாக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் என இந்த படத்தில் பல பிளஸ் பாயிண்டுகள் இருக்கிறது. அடுத்தது ருக்மினி வசந்த்தின் கதாபாத்திரம் சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது. முதல் பாகத்தை போல் ரிஷப் ஷெட்டி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உலக தரத்திலான படைப்பை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'காந்தாரா சாப்டர் 1'.... அப்போ ரூ.1000 கோடி கன்ஃபார்ம்! மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் அதிக வசூலை வாரிக் குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.335 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த படம் விரைவில் ரூ.1000 கோடியை அசால்டாக அள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ