தமிழ் சினிமாவில் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத் தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது ‘டிராகன்’ திரைப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இது தவிர டியூட், எல்ஐகே ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன், ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போவதாக சமீபகாலமாக பேச்சு அடிபடுகிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என சொல்லப்பட்ட நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேட்டியில் பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை. நான் தற்போது முழுமையாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் எனக்கு ரஜினி – கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததா? என்ற கேள்விக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது” என்று சிரித்தபடி கூறியுள்ளார். இவருடைய இந்த பதில் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் பிரதீப், இதனை நேரடியாக மறுக்காமல் கூறியிருப்பது, ஒருவேளை பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினி- கமல் படத்தை இயக்கப் போகிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதால் அவர் இப்படி மழுப்புகிறாரா? அல்லது அந்த பட்டியலில் அவரும் இருந்திருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -