கரூர் சம்பவத்தில் உயிரிழந்த தனுஷ் குமாரின் தங்கையிடம் இனி உனக்கு அண்ணாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என தவெக தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்று 10 தினங்கள் ஆகிய நிலையில், உயிரிழந்த 21 குடும்பத்தினரிடம் நேற்று விஜய் வீடியோ கால் மூலம் பேசினார். விஜய் பேசும் பொழுது கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதில் கரூர் மாவட்டம் செங்கல் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் என்பவர் உயிரிழந்து விட்டார். இவரது அம்மா உமா மகேஸ்வரி மற்றும் தங்கை ஹர்ஷினி ஆகியோரிடம் பேசிய விஜய், ஹர்ஷினியிடம் அண்ணன் இல்லை என்று கவலைப்பட வேண்டாம் உனக்கு நான் அண்ணனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என உறுதி அளித்துள்ளார்.
ரஜினி – கமல் படத்தின் இயக்குனர் நீங்களா?…. குழப்பத்தை ஏற்படுத்திய பிரதீப் ரங்கநாதனின் பதில்!
