spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்- எட்டு பேர் கைது

15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்- எட்டு பேர் கைது

-

- Advertisement -

கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம்- எட்டு பேர் கைதுசென்னை கோயம்பேடு, நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு படை என்ற பெயரில் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு காப்பாற்றி வரும் சமூக சேவகர் முருகன் என்பவர் மூலமாக 15 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்.  கே.கே நகர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமி. இந்த மாணவி தந்தை இறந்த காரணத்தினால், மற்றும் தாய் வேறொருவரை மணந்த காரணத்தினாலும் ஆதரவின்றி இருந்துள்ளார்.

இதனை அடுத்து  சிறுமி தனது தாயின் தோழியான கிளப் டான்ஸ்ருமான பூங்கொடியின் பராமரிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார். மேலும் சிறுமியின் பெரியம்மா மகள் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் இருக்கும் பொழுது அவரது கணவர் கார்த்திக் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கிளப் டான்ஸ் பூங்கொடி ஆசை வார்த்தை காட்டி வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் மாணவி பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததாகவும், ஆனால் உயர் ரக ஆடை, iphone, பணம், சொகுசு வாழ்க்கை என கொடுத்து மாணவியை மயக்கி தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்துள்ளது.

we-r-hiring

தொடர்ந்து சினிமா வட்டாரத்திலும் பலரும் உல்லாசமாக இருக்க மாணவியை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் கே.கே நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா ஆகியோர் மாணவியை வைத்து சம்பாதித்தது விசாரணையில் அம்பலமானது. இந்த நிலையில் தான் குழந்தை பாதுகாப்பு படை என்ற பெயரில் சமூக சேவகர் முருகன் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளார். 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை கண்டுபிடித்து தரகராக செயல்பட்ட துணை நடிகை நாகம்மாவிடம், சமூக சேவகர் வாடிக்கையாளர் போல் பேரம் பேசியுள்ளார்.

இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் சிறுமியை அனுப்பி வைப்பதாக கூறி முருகனிடம் பேரம் பேசியுள்ளனர். முதற்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தருவதாக கூறி பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார். அதன் பிறகு நாகம்மா சிறுமியின் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை அனுப்பி வைத்துவிட்டு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி  கோயம்பேட்டில் உள்ள நேரு சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து சிறுமியுடன் நாகம்மா, அஞ்சலி ஆகிய மூவரும் அறையில் காத்திருந்துள்ளனர்

அப்போது வாடிக்கையாளர் போல் பேசிய சமூக சேவகர் முருகன் விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார்  உதவியுடன் சென்று சிறுமியை  மீட்டனர். சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நாகம்மா மற்றும் அஞ்சலியை அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்பு கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு வழக்கு விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது. 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய காரணத்தினால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியிடமும் கைது செய்யப்பட்ட நாகம்மா, அஞ்சலி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் பெரியம்மா மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகியோரையும் போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர் விசாரணையில் மகேந்திரன்(45) என்ற தனியார் கட்டுமான நிறுவன பொது மேலாளர் சிறுமியோடு பாலியல் வன்கொடுமை செய்தது  தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட கிளப் டான்சர், சினிமா துறையைச் சேர்ந்த நடிகரும் உதவி இயக்குநருமான பாரதி கண்ணன் தொடர்பு மூலம் பல சினிமா தொடர்புடைய நபர்களுக்கு சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாரதி கண்ணன் தான் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாது, சிறுமியை பயன்படுத்தி தொடர்ந்து பல சினிமா பிரபலங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது. குறிப்பாக வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறுமியை தன் நட்பு வட்டாரங்கள் மூலமாக பாலியல் ரீதியாக தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இந்த வகையில் நன்கு வசதி படைத்த முன்னாள் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் என்பவரிடம் உதவி இயக்குநரான பாரதி கண்ணன் சிறுமிக்கு படிப்பிற்கு உதவுமாறு நேரில் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்பு சிறுமியை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதாகும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலம்  அடுத்தடுத்து அம்பலமானது. இதனையடுத்து நடிகரும் உதவி இயக்குநருமான பாரதி கண்ணன் மற்றும் முன்னாள் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வாறாக 15 வயது சிறுமியை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவரையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என எட்டு பேரை சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இன்னும் மாணவியுடன் உல்லாசமாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்த பட்டியலை போலீசார் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். மாணவி பயன்படுத்திய செல்போன் மற்றும் கைதானவர்கள் செல்போன் எண்களை ஆய்வு செய்து அதன் மூலம் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உனக்கு இனி அண்ணாக நான் இருப்பேன்…தவெக தலைவர் விஜய் 

MUST READ