ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் ஆரணி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு இருப்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு நீர் வரத்து
இரண்டு நாட்கள் முன்பு வினாடிக்கு 3900 கன அடி நீர் வரத்து வந்திருந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக ஆரணி ஆற்றுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 10 ஆம் தேதி வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து 1500 கன அடியாக குறைந்ததால் நேற்று உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பிச்சாட்டூர் அணை சுற்றியுள்ள பகுதிகள் தொடர் மழை பெய்து வருவதால் அணை பாதுகாப்பு கருதியும் அணைக்கு வினாடிக்கு 1400 கன அடி நீர்வரத்து வருவதன் காரணமாக மீண்டும் ஆரணி ஆற்றுக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆரணி ஆற்றின் வழித்தடமான ஊத்துக்கோட்டை, தாராட்சி, சிற்றம்பாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், ஆத்துப்பாக்கம், பெரியபாளையம், மங்கலம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, கீழ்முதலம்பேடு, கவரப்பேட்டை, பெருவாயல், பெரிய காவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம், பெரும்பேடு, திருவல்லாயிவாயல் வழியாக பழவேற்காடு கலக்க கூடம் என்பதால் 80 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, துணி துவைக்கவும், செல்பி எடுக்கவோ செல்ல வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீரானது பிச்சாட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கப்பட்டால் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என தமிழக பொதுப்பணி துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.