spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…

டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…

-

- Advertisement -

5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது.டெல்லியில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க ஐகோர்ட் அனுமதி…கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் கடுமையான மாசுக்கட்டுப்பாடு  நிலவி வந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பொிதும் அவதிப்பட்டு வந்தனா். இதன் காரணமாகவே அங்கு எங்கு பாா்த்தாலும் பனிமூட்டமாகவே காணப்பட்டது. எனவே அங்கு பட்டாசு வெடிக்க தடைவிதிக்கபட்டது. இதனால் அங்கு எந்த வகையான பட்டாசுகளை தயாரிக்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் பட்டாசுகளை வெடிப்பதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இதனால் பட்டாசு தொழிலை நம்பி இருப்பவா்களின் வாழ்க்கை முடங்கிப் போனது.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னா் தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட ஐகோா்ட் அனுமதி வழங்கியுள்ளது. சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக தடையை தளர்த்தலாம் என மத்திய அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.  இதனை ஏற்றுக் கொள்ளும் ஐகோா்ட் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதனால் ஐகோா்ட்டின் இந்த உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். அதே சமயம் இந்த உத்தரவால் டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறும்..!!

we-r-hiring

MUST READ