spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த உரிமையாளர் கைது…

பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த உரிமையாளர் கைது…

-

- Advertisement -

அந்தியூர் அருகே மின்சார இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் தொடங்கிய 15 நாட்களில் விற்பனை நிலையத்திற்கு பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பணிக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த உரிமையாளர் கைது…ஈரோடு மாவட்டம் அந்தியூர், ஓடைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(29) திருமணமான இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அம்மாபேட்டை பகுதியில் மயூரன் ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் இருசக்கர வாகன விற்பனை நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் கடந்த 10 நாட்களாக பணிக்கு வந்துள்ளார். அந்த பெண்ணிடம் தமிழரசன் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அதற்கு அந்த பெண் பலமுறை எச்சரித்து வந்துள்ளார்.

மேலும், தொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகளை பேசியதோடு நேற்று பணிக்கு வந்த பெண்ணிடம் விற்பனை நிலையத்திலேயே பாலியல் துன்புறுத்தலில் எல்லை மீறிய செயலில் ஈடுபட்டுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த பெண் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகன விற்பனை நிலையம் தொடங்கிய 15 நாட்களில் பணிக்கு வந்த இளம்பெண்ணிடம் நிறுவனத்தின் உரிமையாளர் பாலியல் ரீதியாக அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயை தூக்கிய அமித்ஷா! கூட்டணிக்கு ஏங்கும் எடப்பாடி! உமாபதி நேர்காணல்!

we-r-hiring

MUST READ