கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில், தனக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்குவதற்காக தான் விஜய் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் வாழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூரில் 41 பேர் கொல்லப்பட்டது போன்ற நிலைமை விஜய்க்கு நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக தான் அவருக்கு கரூர் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்பதாக நயினார் நாகேந்திரன் சொல்கிறார். அவருடைய தலைவர் அமித்ஷா தானே மேலே இருக்கிறார். அவர் விசாரிக்க வேண்டியது தானே. மத்திய அரசே பாஜக கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவர்கள் மத்திய அரசை வைத்து வழக்கு தொடர வேண்டியதுதானே. சி.ஆர்.பி.எப் வீரர்களே ஆதவ் அர்ஜுனாவை அழைத்துச்சென்று அறிக்கை எல்லாம் வாங்கியுள்ளீர்கள். அதை வைத்து முடிவு எடுக்க வேண்டியது தானே. கரூருக்கும் பாஜக எம்.பிக்கள் குழு வந்தபோதும், அண்ணாமலை குறுக்கே புகுந்து ஸ்கோர் செய்துவிட்டார். நயினார் நாகேந்திரன் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அண்ணாமலை அதை மறுத்து கரூர் வருவதற்கு விஜய்க்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்கிறார். அந்த வயிற்றெரிச்சலில்தான் இப்படி எல்லாம் பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. கூட்டணி வாழ்க்கையும் முடிந்துவிட்டது. அவருக்கு நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது போல நிகழ்வுகள் அமைந்துவிட்டன. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடையாவிட்டால் இந்நேரம் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலேயே இருந்திருக்க மாட்டார். தீபாவளி வரை விட்டுவிடுவார்கள். இம்மாத இறுதிக்குள் தூக்கிவிடுவார்கள். அக்டோபர் முடிந்து நவம்பர் மாதம் தொடங்கிய உடன் அரசியல் வேறு மாதிரி போகும். பீகார் தேர்தலில் பாஜக தோற்றுவிட்டது என்றால் ஓரளவுக்கு எடப்பாடி தப்பி விடுவார். ஆனால் பாஜக திருட்டு ஓட்டு போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது என்றால் எடப்பாடிக்கு வினைதான். பீகாரில் நிதிஷ்குமாரே வெற்றி பெற்றாலும் மீண்டும் முதலமைச்சர் ஆக முடியாது. அவரை தோற்கடித்து 30 சீட்டுகளுக்கும் குறைவாக கொண்டு வந்து விடுவார்கள்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் பங்கேற்ற சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார். ஹெச்.ராஜா, எம்ஜிஆருக்காக அந்த காலத்தில் ரசிகர்கள் 36 மணி நேரம் காத்திருந்தனர் என்று சொல்கிறார். இப்படி சொல்கிற வாய்தான், அப்போது ஜோசப் விஜய் என்று ஆதார் அட்டையை எடுத்து போட்டார். ஹெச்.ராஜா தற்போது ஹீரோ ஆகிவிட்டதால் விஜயின் தயவு தேவைப்படும் என்று நினைக்கிறார். ஹெச்.ராஜா தற்போது முழு நேர நடிகராக மாறிவிட்டார். அடுத்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டலாம் போட்டியிடலாம். விஜய் பாஜக கூட்டணிக்கு வந்துவிட்டார் என்றால் ஜனநாயகன் பட வெளியீட்டிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அவர் ஒத்துவரவில்லை என்றால், ஜனநாயகன் பட வெளியீட்டின்போது ஹெச்.ராஜா நடித்த கந்தன் மலை படத்தை வெளியிடுவார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் ஏற்கனவே பாலையா நடித்த பவந்த் கேசரி என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் என்றும், அந்த படத்தில் சேர்க்க ஷுட்டிங் எடுக்க சென்றபோது தான் கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவில் யார் விசாரணை அதிகாரி என்றும் தெரியவில்லை. நீதிபதி எப்படி புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருகிற விசாரணை அதிகாரியாக போக முடியும்? என்றும் தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது, விஜய் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த கருத்துக்களை நீக்கிவிடுங்கள் என்று சொல்வதற்காக தான். தற்போதும் தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அவர் கரூருக்கு செல்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்