நடிகை ஓவியா, டியூட் படத்தை வைத்து மீண்டும் விஜயை விமர்சித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இன்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் டியூட். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இதை இயக்கியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கலகலப்பான பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று திரையிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஓவியா, டியூட் படம் குறித்து தனது கருத்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Just watched #Dude. What a film! ❤️ A pure entertainer 👌 Pradeep’s acting in this film is far ahead of Vijay’s entire career.
Honestly, instead of starting a political party and misleading people, Joseph Vijay should’ve just joined an acting class. pic.twitter.com/8e2tckNn2X
— Oviya (@oviya__offll) October 17, 2025

அந்த பதிவில், “இப்போதுதான் ‘டியூட்’ படம் பார்த்தேன். என்ன ஒரு படம். ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு விஜயின் முழு சினிமா வாழ்க்கையையும் விட மிகவும் முன்னேறி உள்ளது. உண்மையைச் சொன்னால், அரசியல் கட்சியை தொடங்கி மக்களை தவறாக வழி நடத்துவதற்கு பதிலாக ஜோசப் விஜய் ஒரு நடிப்பு வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கரூர் சம்பவம் நடந்த போது நடிகை ஓவியா விஜயை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்டிருந்தது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே ரசிகர்கள் பலரும் ஓவியாவை கமெண்ட்டில் திட்டி தீர்த்து வந்தனர். இந்நிலையில் ஓவியா மீண்டும் விஜயை விமர்சித்திருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
இன்னும் சிலர் இது உண்மையிலேயே நடிகை ஓவியாவின் ஒரிஜினல் ட்விட்டர் கணக்கா? அல்லது ஃபேக் ஆனதா? என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.