பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்த பிரதீப்-க்கு இந்த படம் இந்திய அளவில் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் வெற்றி படமாக அமைய சமீபத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது ‘டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் ஃபுல் எனர்ஜியுடன் நடித்து காதல், காமெடி, ஆக்ஷன், ஸ்டைல், சென்டிமென்ட் என அனைத்திலும் பின்னி பெடலெடுத்திருந்தார். லவ் டுடே, டிராகன் படங்களை போல் இந்த படமும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.
இதன் பின்னர் வருகின்ற டிசம்பர் மாதம் 18ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்ஐகே’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றிப்படமாக அமையும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியின் போது பிரதீப் ரங்கநாதனிடம், “இதுவரை காதல் படங்களில் நடித்து வந்த நீங்க ‘வடசென்னை’, ‘அசுரன்’ போன்ற வன்முறை படங்களில் நடிப்பீங்களா? அதை நாங்கள் எதிர்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
Question: You often choose youthful love stories…..🤝 Can we expect violent films like #VadaChennai and #Asuran from you….❓#PradeepRanganathan: You can expect that soon…..🌀#Dude | #LIK
pic.twitter.com/7HDBr68vgm— Movie Tamil (@_MovieTamil) October 22, 2025
அதற்கு பிரதீப் ரங்கநாதன், “விரைவில் வரும்” என்று பதிலளித்துள்ளார்.

இதுவரை கலகலப்பான காதல் கலந்த பொழுதுபோக்கு படத்தில் நடித்து வந்த பிரதீப் ரங்கநாதன், இனி வன்முறை படங்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆகையினால் ரசிகர்கள் இப்பொழுதே அதை கற்பனை செய்து பார்க்க தொடங்கி விட்டார்கள். ஆனாலும் வன்முறை படங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒர்க் அவுட் ஆகுமா? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.


