காந்தாரா சாப்டர் 1 படத்தின் இங்கிலீஷ் வெர்ஷன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகியிருந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. கடந்த 2022 ஆம் வெளியான காந்தாரா படத்தை போல் இந்த படமும் தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் மேக்கிங், கிளைமேக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் போன்றவை ரசிகர்களை கவர்ந்து உலக அளவில் வெற்றி நடைபோட்டு வருகிறது. பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த படமானது தற்போது வரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா படத்தின் பிரீக்குவல் கதையாக உருவாகியிருந்த இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அஜனீஸ் லோகநாத் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


