spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!

60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!

-

- Advertisement -

துபாய்: சர்வதேச டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் அரினா சபலென்கா 60வது வாரமாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.60வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கும் சபலென்கா!!27 வயதே நிரம்பிய பெலாரசின் அரினா சபலென்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வுஹான் ஓபனில் பட்டம் வென்று, ஸ்வியாடெக்கை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார். அப்போது முதல் இன்று வரை அவர் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 64, செக் குடியரசின் கரோலின் வோஸ்னியாக்கி 71 வாரங்கள் முதலிடத்தில் நீடித்துள்ளனர். அவர்களின் சாதனையை பெலாரசின் அரினா சபலென்கா முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்

we-r-hiring

MUST READ