பிரதீப் ரங்கநாதன் மூன்றாவது முறையாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து இவர் ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதாவது ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த படமும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அடுத்தது கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பிரதீப் ரங்கநாதனின் 4வது படமான ‘டியூட்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கீர்த்திஸ்ரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. வழக்கம்போல் இந்த படத்திலும் பிரதீப் ரங்கநாதன் ஃபுல் எனர்ஜியுடன் நடித்து காதல், காமெடி, எமோஷன், ஆக்சன் என அனைத்திலும் கலக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வசூல் ரீதியாக வெற்றி நடைபோட்டு வருகிறது. அந்த வகையில் இப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறு ஆல் ஏரியாவிலும் மாஸ் காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் மூலம் ரூ.200 கோடியை கடந்து புதிய சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இவருடைய உடல் அமைப்பை பார்த்து தனுஷை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் ‘லவ் டுடே’ படத்தின் போது நடிகைகள் சிலர் இவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பு, மேனரிசம், ஸ்டைல் ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். எனவே இனிவரும் நாட்களில் ‘டியூட்’ திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று நம்பப்படுகிறது.


