spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇசைக்கலைஞர் சங்கத்தை கட்டி முடிக்க ஆசைப்பட்டாா் சபேஷ் - கே எஸ் ரவிக்குமார் உருக்கம்

இசைக்கலைஞர் சங்கத்தை கட்டி முடிக்க ஆசைப்பட்டாா் சபேஷ் – கே எஸ் ரவிக்குமார் உருக்கம்

-

- Advertisement -

திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தை நல்ல முறையில் கட்டி முடிக்க வேண்டும் என்று சபேஷ் விரும்பினார் என்று இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறினாா்.இசைக்கலைஞர் சங்கத்தை கட்டி முடிக்க ஆசைப்பட்டாா் சபேஷ் - கே எஸ் ரவிக்குமார் உருக்கம்இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சபேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
“நான், தேவா அவரது சகோதரர்கள் கிரேசி மோகன் அனைவரும் மந்தை வெளியில் உள்ள பள்ளியில் தான் ஒன்றாக பயின்றோம் என்றும் தேவா மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகில் சாதித்ததாகவும், தன்னைப் போலவே தன் தம்பிகளையும் நல்ல இசையமைப்பாளராக உருவாக்கி உள்ளார் என்றார். இசையமைப்பாளர் தேவாவிற்கு அவரது இரு சகோதரர்களும் ஆதரவாக இருந்ததாகவும், நான் கிட்டத்தட்ட 47 படங்கள் இயக்கி இருந்தால், அதில் சுமார் 18 படங்களுக்கு தேவா தான் இசையமைத்துள்ளார் என்றும், அப்போது தேவா, சதீஷ், முரளி, ஸ்ரீகாந்த் தேவா போன்றவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர்களின் வேலை எப்படி இருக்கும் என்று தனக்கு தெரியும் என்றும கூறினாா்.

மேலும், சபேஷ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான பிறகு அந்த சங்க கட்டிடத்தை நல்ல முறையில் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், வரும் ஜனவரி மாதம் அந்த கட்டிடத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து இளையராஜா ஏ ஆர் ரகுமான் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களையும் வரவழைத்து அந்த சங்க கட்டடத்தை நல்ல முறையில் திறந்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய தான் இறைவனை வேண்டுகிறேன்“ என்று கூறினாா்.

இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி…

we-r-hiring

MUST READ