spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநள்ளிரவில் தீ விபத்து!! பெண் பலி!!

நள்ளிரவில் தீ விபத்து!! பெண் பலி!!

-

- Advertisement -

சென்னையில் மருத்துவா் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், மருத்துவா் உட்பட அவரது குடும்பமே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நள்ளிரவில் துயரம்!! ஒரே குடும்பத்தை சேர்ந்த பேர் 4 பலி!! சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் ஆனந்த பிரதாப் (64) என்பவா் வசித்து வருகிறாா்.  இவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் இவரது மனைவி சசி பாலா (58), மகள் பூஜா ஆனந்த்(24) மகன் ரோகித் ஆனந்த் (23) ஆகிய நால்வரும் வழக்கம் போல் நேற்று இரவு உணவருந்தி விட்டு உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை டாக்டரின் வீட்டிலிருந்து புகை வாடை வந்துள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வேளச்சேரி மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீடு முழுவதும் புகையாக காட்சியளித்தது. டாக்டரின் மனைவி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் தீ காயங்கள் இருந்தன. அதேபோல் மூச்சுத் திணறலால் மயங்கி கிடந்த டாக்டர் ஆனந்த பிரதாப் அவரது மகன் ரோகித் ஆனந்த், மகள் பூஜா ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் தீயணைப்பு துறையினர் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

we-r-hiring

ஆதம்பாக்கம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. டாக்டர் ஆனந்த் பிரதாப்பின் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் –  கவிப்பேரரசு வைரமுத்து

MUST READ