நெல்லையில் செம்மறி ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமரன். இவா் தனது மனைவி லட்சுமியுடன் தங்கள் தொகுதியில் விவசாயம் செய்து வருகின்றாா். முத்துக்குமரன் ஒரு ஆட்டுக்குட்டியை பாசமாக வளா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், முத்துவின் குடும்பத்திற்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்க வேண்டி நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே உள்ள இருசக்கர வாகனத்தின் ஷோரூமுக்கு தனது குடும்பத்துடன் தான் வளா்த்து வந்த ஆட்டுக்குட்டியையும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.
வண்டியின் ஆவணங்கள் அனைத்தையும் சரி செய்து கையெழுத்திட்டு, பணம் கொடுக்கும் சமயத்திலும் அந்த ஆட்டுக்குட்டி ஷோரூமுக்கு உள்ளே வந்து முத்து கூடவே இருந்தது. அவர் வெளியில் எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே ஆட்டுக்குட்டி சுற்றித்திரிந்தது. இது பார்ப்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளும் போதும் அன்பின் அடையாளமாக ஆட்டுக்குட்டியை முத்து கையிலே வைத்திருந்து வாகனத்தின் சாவியை பெற்றுக் கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூரில் லஞ்சம் பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது …



