இன்றுள்ள உணவு பழக்கங்களின் மாறுபாட்டால் பலருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. சரியான வாழ்க்கை முறையை பின்பற்றினால் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயற்கையான முறையிலேயே குழந்தை பாக்கியத்தை பெறலாம்.
அதற்கு ஆண், பெண் அதாவது கணவன் – மனைவி இருவருமே 30 அல்லது 45 நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட வேண்டும். சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. அதே போல் செவ்வாழை பழத்தையும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இது தவிர 5 பாதாம், 5 முந்திரி, 20 வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து நன்கு மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். (குறிப்பு இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது)

அடுத்தது திணை அரிசி, திணை மாவு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிடலாம். இதனை இரண்டு முதல் நான்கு ஸ்பூன் வரை சாப்பிடலாம். மேலும் அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும். புழுங்கல் அரிசியுடன், கோதுமை கலந்து கஞ்சி செய்து சாப்பிடலாம்.
இதுபோன்று நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் சத்தான பொருட்களை சேர்த்துக் கொள்வதால் பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும், ஆண்களுக்கு விந்தணுவின் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் மன அழுத்தம் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நிம்மதியான தூக்கம், உடற்பயிற்சி செய்தால் இயற்கையிலேயே குழந்தை பேறு பெறலாம்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
