ஜெயிலர் 2 படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. அடுத்தது வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி சூப்பர் ஸ்டார் – சுந்தர். சி கூட்டணியின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அதிரடி ஆக்சன் படமாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்து இமாலய வெற்றி பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி ரஜினி – நெல்சன் – அனிருத் ஆகியோரின் காம்போவை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கோவாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது அடுத்த மாதம் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ படம் தொடர்பான மிகப்பெரிய அப்டேட் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் அந்த நாளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இது தவிர இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


