- Advertisement -
முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 10 காசுகள் உயர்வு
முட்டை விலை ஒரே நாளில் 10 பைசா உயர்ந்து 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

மொத்த உற்பத்தியில் 40% முட்டைகள் கேரள மாநிலத்திற்கும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. எஞ்சிய முட்டைகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு வியாபாரத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 7 நாட்களுக்கு பிறகு முட்டை விலை 10 காசு அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் எதிர்வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக பண்ணையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


