spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஊடகத்துறையில் பட்டியலின மாணவர்கள்.. உண்டு உறைவிட பயிற்சியை தொடங்கிய அரசு..

ஊடகத்துறையில் பட்டியலின மாணவர்கள்.. உண்டு உறைவிட பயிற்சியை தொடங்கிய அரசு..

-

- Advertisement -

தலைமைச் செயலகம்

இதழியல் மற்றும் ஊடகத்துறையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் சார்பில் 50 மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

we-r-hiring

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் சார்பில் இதழியல் மற்றும் தொடர்பியில் துறையில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி இன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 300 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்குமிடம் உணவுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த உண்டு உறைவிட பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் லட்சுமி பிரியா, மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் இமயம், சென்னை எதழைகள் கல்வி நிறுவனத் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயராஜன், ஜனநாயக பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியம், சமூக ஜனநாயகம், பொருளாதார ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதற்கு ஏற்ப அதற்கான பெரு முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இந்த துறையில் அரசு கொண்டு வந்த 69% இட ஒதுக்கீடு கடுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் அரசு தேர்தல் மூலம் ஏற்படுகிறது. நீதித்துறை எந்த வகையில் செயல்படுகிறது என்று தெரியவில்லை. பத்திரிக்கை துறையில் எஸ் சி, எஸ் டி பிரிவினருக்கான ஒதுக்கீடு தேவை இருக்கிறது அதற்கு இந்த பயிற்சி பட்டறை நல்ல தொடக்கம். தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளாக சமூக நீதிக்கான பிரதிநிதித்துவத்தை நாம் முன்வைத்து வருகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் எழுத்தாளர் இமையம், இதழியல் மற்றும் ஊடகத்துறையில் பயிலும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ள நிலையில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இந்த நிகழ்ச்சியும், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் செயல்படும் வகையில் முதலமைச்சர் அதனை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

மேலும், எஸ்சி.எஸ்டி மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்தால் மட்டுமே அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும் என்று இந்த கல்லூரி தொடங்கப்பட்டது என கூறிய அவர், பட்டியலின மாணவர்கள் இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள் என்றும், இது போன்ற திட்டத்தின் மூலம் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் முன்னேறுவார்கள் எனக் கூறிய அவர், எடிட்டிங், சொற்றொடர் அமைத்தல், ஒரு செய்தி உருவாக்க முதல் முடிவு வரை எப்படி இருக்கும் என்று முழுமையான பயிற்சி அளிக்கப்படும். மேலும் இந்த மாணவர்களுக்கு இரண்டு மாதம் ஊடக நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஊடகம் மட்டுமல்லாது ஊடகத்தின் வழியாக சமூகத்தை படிக்க இந்த வகுப்புகள் மிகவும் உதவுமென கூறினார்.

MUST READ