Homeசெய்திகள்சினிமாஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

-

- Advertisement -

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன! விஜய் ஆண்டனியின் தமிழரசன், விமலின் தெய்வ மச்சான், யோகி பாபுவின் யானை முகத்தான் மற்றும் யாத்திசை படங்கள் இன்று வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் “தமிழரசன்” திரைப்படம் உருவானது. இந்த படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்தப்படம் அவ்வப்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன தமிழரசன் திரைப்படம் ஒரு வழியாக இன்று வெளியானது.

அதேபோல யோகி பாபுவின் “யானை முகத்தான்” திரைப்படமும் கடந்த 14-ம் வெளியாக இருந்த நிலையில் தள்ளிப்போனது. மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் ஊர்வசி, கருணாகரன், ரமேஷ்திலக், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் என பலர் நடித்துள்ளனர். இந்த படமும் இன்று வெளியானது.

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் “தெய்வ மச்சான்” திரைப்படம் இன்று வெளியானது. நடிகர் பாண்டிய ராஜன், ஆடுகளம் நரேன், பாலசரவணன் உள்பட பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் காமெடி படமாக உருவாகி உள்ளது.

இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், பாண்டியர்களின் வரலாற்றை பேசும் படைப்பாக “யாத்திசை” திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் ஷக்தி மித்ரன், சேயோன், குரு சோமசுந்தரம், மு. சந்திரகுமார், ராஜலட்சுமி, செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமும் இன்று வெளியானது.

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான “கிசி கா பாய் கிசி கி ஜான்” திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வருகிறது. ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கும் வீரம் படத்தில் ’சல்மான் கான்’ கதாநாயகனாக நடித்துள்ளார். ’பூஜா ஹெக்டே’ அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

மே 5 ஆம் தேதி வெளியாகும் விமலின் ‘குலசாமி’! விமல், தான்யா ஹோப் நடிப்பில், சரவண சக்தி இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த ‘குலசாமி’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

ஒரே நாளில் இன்று 4 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன!

நடிகர் விமலின் “தெய்வ மச்சான்” மற்றும் “குலசாமி” என இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் ‘தெய்வ மச்சான்’ திரைப்படம் மட்டுமே இன்று வெளியானது.

இந்நிலையில் குலசாமி படத்தை மே 5 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. விமலின் குலசாமி படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ