spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் சார்ஜிங் மையங்கள் - எந்தெந்த இடங்கள் தெரியுமா?

சென்னையில் சார்ஜிங் மையங்கள் – எந்தெந்த இடங்கள் தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது.சென்னையில் சார்ஜிங் மையங்கள் -  எந்தெந்த இடங்கள் தெரியுமா?தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை தொடர்ந்து, பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை மற்றும் பூங்காக்களில் இந்த நிலையங்கள் அமைப்பட உள்ளது.

வேளச்சேரி அஷ்டலட்சுமி கோவில் வாகன நிறுத்துமிடம், பெசன்ட் நகர் கடற்கரை, அம்பத்தூர் மங்கள் ஏரி பூங்கா, தி.நகர் மாநகராட்சி விளையாட்டு திடல் வாகன நிறுத்துமிடம், சோமசுந்தரம் பூங்கா வாகன நிறுத்துடம், செம்மொழி பூங்கா, மெரினா கடற்கரை, அண்ணா நகர் போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வராவ் பூங்கா ஆகிய 9 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. இரண்டு சக்கம், மூன்று சக்கரம், நான்கு சக்கரம் என்று அனைத்து வகையான வாகனங்களுக்கும் சார்ஜிங் செய்யும் வகையில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

வேதாரண்யம் தொகுதியை வென்றே தீர வேண்டும் – கண்டிப்புடன் கூறிய முதல்வர்

we-r-hiring

MUST READ