மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது வின்வெளி நிறுவனமானஜெஃப் பெஸோஸின் Blue Origin நிறுவனம்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி, ஜெஃப் பெஸோஸின் விண்வெளி நிறுவனமான Blue Origin உலகில் இத்தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய இரண்டாவது நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகம் நாசாவின் ‘ESCAPADE’ எனப்படும் இரண்டு விண்கலன்களை செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவியதைத் தொடர்ந்து, Blue Origin நிறுவனத்தின் New Glenn ராக்கெட் பூஸ்டர் தனது பணி முடிந்ததும் அட்லாண்டிக் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்குவதில் வெற்றி கண்டது.

இந்த தரையிறக்கம், ராக்கெட்டுகளை ஒரு முறைக்குப் பிறகும் மீண்டும் பயன்படுத்தி, செலவைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப துறையில் Blue Origin நிறுவனம் எட்டிய மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
SpaceX நிறுவனத்தின் Falcon ராக்கெட்டுகள் இந்த தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்த நிலையில், New Glenn ராக்கெட்டின் வெற்றியான லாண்டிங், விண்வெளிப் போட்டியில் புதிய ஆற்றலை ஏற்படுத்தியுள்ளது.
Blue Origin-ன் இந்த சாதனை, எதிர்காலத்தில் செலவு குறைந்த விண்வெளி பயணங்கள், வணிக விண்வெளிப் பயணங்கள் மற்றும் செவ்வாய் ஆராய்ச்சிகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


