spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீட்டிலிருந்தே சம்பாதிக்க பெஸ்ட் ஐடியா.... முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்...

வீட்டிலிருந்தே சம்பாதிக்க பெஸ்ட் ஐடியா…. முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்…

-

- Advertisement -

வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் கிளவுட் கிச்சன்! எப்படி தொடங்குவது? கிளவுட் கிச்சன் என்றால் என்ன? முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்!வீட்டிலிருந்தே சம்பாதிக்க பெஸ்ட் ஐடியா.... முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்...வெளியூர்களிலிருந்து வேலை நிமித்தமாக இங்கு தங்கும் பேச்சுலர்கள், பிஜியில் தங்கி வேலை செய்பவர்கள், படிப்பவர்கள் என பலரும் வீட்டு உணவை அதிகம் நேசிக்கிறார்கள். அவர்களுக்கு அதிக மசாலாக்கள் சேர்க்காமல் வீட்டில் செய்வது போன்ற ருசியும், ஹோட்டலில் சாப்பிடுவதைவிட குறைவான விலையிலும் நீங்கள் உணவை சமைத்து, அதை ஸ்விகி, சோமேட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப் மூலம் விநோயகம் செய்வதே இந்த கிளவுட் கிச்சன். இதற்கு நீங்கள் உணவு டெலிவரி ஆப்புடன் டையப் செய்ய வேண்டும்.

அவர்கள் உங்களது வீட்டுக்கே வந்து நீங்கள் சமைத்த உணவுகளை பெற்று கொண்டு, ஆர்டர் செய்தவர்களுக்கு டெலிவரி செய்து விடுவார்கள். மொத்த ஆர்டரில் ஒரு தொகையை நீங்கள் அவா்களுக்கு கமிஷனாக தர வேண்டும். மீதி தொகை உங்களுக்கு தான்.

we-r-hiring

கிளவுட் கிச்சன் தொடங்க தேவையானவை

கிளவுட் கிச்சன் தொடங்க 50 முதல் 300 சதுர அடி வரை இடம் இருந்தாலே போதும். வீட்டு மாடியில் கூட இந்த கிச்சனை தொடங்கலாம். இல்லையெனில், உங்கள் வீட்டு கிச்சன் கூட இதற்கு போதுமானவை தான். கிளவுட் கிச்சன் தொடங்கிய பின்பு வாடிக்கையாளர்களை பிடிக்க, சோஷியல் மீடியாக்களில் பிரமோட் செய்ய தொடங்க வேண்டும். அதற்கு ஒரு சிறிய பெயர் மற்றும் பிராண்ட், லோகோ தயாா் செய்து கொள்ள வேண்டும். பிறகு உணவு டெலிவரி ஆப்பில் டையப் செய்துக் கொள்ளலாம்.

உங்கள் கிச்சன் மெனு

காலை,மதியம், இரவு நேர உணவுகளை பட்டியலிட வேண்டும். ஆர்டர்களை எடுத்த பின்பு அதை முறையாக சமைத்து, பேக் செய்ய வேண்டும். காரணம் கிளவுட் கிச்சனில், வாடிக்கையாளர்கள் சொல்லும் குறை பேக்கிங் தான். சரியாக பேக் செய்யவில்லையெனில்  உணவு ஒன்றோடு ஒன்று கலந்து விடும். பேக்கிங்கில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். உணவு டெலிவரி ஆப் வழியாக இல்லாமல் நீங்களாகவே நேரடியாக டெலிவரி செய்ய அருகில் இருக்கும் ஆபீஸ், கடைகள், சிறிய சிறிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையை அணுகி உங்களுடைய கிளவுட் கிச்சன் பற்றி கூறி ஆர்டர் எடுக்கலாம். அங்கிருப்பவர்களுக்கு காலை அல்லது மதிய உணவை சரியான நேரத்தில் டெலிவரி செய்யலாம். சில நிறுவனத்தில், அவர்களே வந்து உணவை எடுத்து செல்வார்கள். இப்படி கிளவுட் கிச்சன் பிசினஸில் முன்னேற பல வழிகள் உண்டு. அதனால் தான் இதில் முதலீடு குறைவு, லாபம் அதிகம் .

மனதில் கொள்ளுங்கள்

கிளவுட் கிச்சனை குறைவான வாடிக்கையாளர்களை வைத்து நீண்ட நாள்களுக்கு நடத்த முடியாது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஆர்டர் செய்வதற்கான உத்திகளை யோசியுங்கள், நிறைய மெனு வகைகளை அடிக்கடி சேர்க்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை ஆபர், 1 மாதம் பேக், 5 மாதம் பேக் என ஆஃப்ருடன் அறிவிக்கலாம். ரெகுலர் வாடிக்கையாளர்களிடம் காண்டெக் வாங்கி, அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கிளவுட் கிச்சன் பற்றி தெரியப்படுத்தி ஆர்டர் எடுக்கலாம். பிறந்த நாள் ஆர்டர், ஆஃபிஸில் ஸ்பெஷல் டே ஆர்டர் எடுப்பது என அப்படியே தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் செய்யலாம். உங்கள் வீட்டு கிச்சனில் இருந்தே சமைக்க போகிறீர்கள் என்றால் ரூ.30,000 முதலீடே போதுமானவை. பாத்திரங்கள், சமையல் பொருட்கள் இவை மட்டுமே புதியதாக வாங்க வேண்டும். தனியாக வீட்டு எடுத்து கிளவுட் கிச்சன் செட்டப்பில் சமைக்க போகிறீர்கள் என்றால் ரூ.50,000 வரை போதுமானதாக இருக்கும். பெங்களூர் மற்றும் சென்னை போன்ற மாநகரங்களில் ஹோட்டல் செஃப்க்கள் கூட இப்போது கிளவுட் கிச்சன் தொடங்கி அதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…

 

 

MUST READ