கழற்சிக்காய் என்பது கர்ப்பப்பையை பாதுகாப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டால் பெண்களின் கர்ப்பப்பையில் நோய்த் தொற்றுகள் ஏற்படுவது அதிகமாக தொடங்கிவிட்டன. இதன் முக்கிய விளைவாக குழந்தை பேறு கிடைக்காமல் போவதும், இளம் வயதிலேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய மோசமான சூழ்நிலைகளும் உண்டாகின்றன. எனவே இது போன்ற பிரச்சனைகளை தடுக்க கழற்சிக்காய் பயன்படுத்துவது நல்லது.

அதாவது கழற்சிக்காய்களை காய வைத்து பொடியாக்கி அதனை ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடித்து வர கர்ப்பப்பையில் உருவாகும் தொற்றுகள் நீங்கி கர்ப்பப்பை பாதுகாக்கப்படும். கழற்சிக்காயானது உடல் சூட்டை தணித்து கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது. இது பெண்களுக்கு உண்டாகும் நீர்கட்டிகளை சரி செய்யவும் உதவுகிறது.
அந்த வகையில் கழற்சிக்காயின் உள்ளே இருக்கும் பருப்புகளை காய வைத்து பொடியாக்கி, அந்த பவுடருடன் சிறிதளவு மிளகுத்தூள், சிறிதளவு தேன் கலந்து உருண்டைகளாக உருட்டி தினமும் இரண்டு வேளைகள், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் கரையும். பெண்களுக்கு மட்டும் அல்லாமல், ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதத்தை குறைக்கவும் இந்த கழற்சிக்காய் பயன்படுகிறது. உயிரணுக்கள் அதிகரிக்கவும் இது உதவுகிறது.
மேலும் கழற்சிக்காய் பவுடரை தண்ணீரில் கலந்து ஆறாத புண்களில் தடவினால் விரைவில் குணமாகும். இது தவிர இதன் விதைகளை வறுத்து பொடியாக்கி அதனை தினமும் சாப்பிட்டு வர தொழுநோய் குணமாகும். இதன் காய், விதைகளில் மட்டுமல்லாமல் பூ, பட்டை, வேர்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.


