spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!

அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!

-

- Advertisement -

மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் மது, விருந்து கொடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளா்.அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள இடையூறாக இருந்த இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை!!திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சம்பத் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுவிதா மீஞ்சூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகன் ரஞ்சித் (25). எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் புதியதாக கார் வாங்கி ட்ராவல்ஸ் நடத்த உள்ளதாக தமது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார். மேலும் இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சித், மீஞ்சூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி ரஞ்சித் வீட்டில் இருந்த போது அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்து மது அருந்த செல்லலாம் என கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். 19 ஆம் தேதி தமது நண்பருடன் வெளியே சென்ற ரஞ்சித், இரவு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடி வந்துள்ளனர். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு, ரஞ்சித் கிடைக்காத நிலையில் மறுநாள் காலை மீண்டும் தேடி உள்ளனர். 20 ஆம் தேதி காலையில் தோட்டக்காடு ஊர் எல்லையில் தனியார் நிலத்தில், இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர் ஒருவர் முட்புதரில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து ஊருக்குள் தகவல் கொடுத்துள்ளார்.

we-r-hiring

பொதுமக்கள் வந்து பார்த்த போது தண்ணீரில் தலை, கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் சடலமாக இருந்தது காணாமல் போன ரஞ்சித் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் ரஞ்சித், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் தந்தை சம்பத் அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலாஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரஞ்சித், அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் பெண்ணின் உறவினர்களுக்கும், ரஞ்சித்துக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சுற்றுப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் பதுங்கி இருந்த 4பேரை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்களை காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

பிடிபட்ட நபர்களில் அதே ஊரை சேர்ந்த தினேஷ் என்பவரது அக்கா பல வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவரது மகள் ஆர்த்திகா ஸ்ரீ என்பவரை தங்களது வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். நாளடைவில் அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள தினேஷ் ஆசைப்பட்ட நிலையில் அதற்கு சம்மதிக்காத அக்கா மகளோ அதே ஊரை சேர்ந்த ரஞ்சித்தை காதலித்து வந்துள்ளார். ரஞ்சித்தும், ஆர்த்தியும் காதலித்து எல்லை மீறி நெருங்கி பழகியதால் ஆர்த்தி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரஞ்சித், ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆர்த்திகா ஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கா மகளை திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசையாய் காத்திருந்த நிலையில், அதற்கு ரஞ்சித் முட்டுக்கட்டை போட்டதால் அவர் மீது தினேஷிற்கு பகை வந்துள்ளது.

இதனையடுத்து தினேஷ் தமது சகோதரர் உதயா என்பவருடன் சேர்ந்து, ரஞ்சித்தை வஞ்சம் தீர்க்க திட்டம் தீட்டியுள்ளார். ஒரு வார காலமாக கொலையை அரங்கேற்றுவதற்கு தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். 19 ஆம் தேதி அதே ஊரை சேர்ந்த நவீன்ராஜ் என்பவரை அனுப்பி ரஞ்சித்தை மது குடிக்க அழைத்துள்ளனா்.  நண்பர் அழைப்பை ஏற்று வந்த ரஞ்சித்திற்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ள பிளாட்டில் அமர்ந்து கொடுத்து மது விருந்து வைத்துள்ளனர்.  நண்பர்கள் ஊற்றி கொடுத்த மதுவை குடித்ததால் ரஞ்சித்திற்கு போதை தலைக்கேறிய நிலையில் தினேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ரஞ்சித்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அக்கா மகளை திருமணம் செய்ய முடியாமல் இடையூறாக இருந்து அவரது தற்கொலைக்கு காரணமான ரஞ்சித்தை வெட்டி கொலை செய்து தமது ஆத்திரத்தை  தீர்த்துள்ளார்.

தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சித்தின் சடலத்தை தரதரவென இழுத்து சென்று அருகில் இருந்த தண்ணீரில் வீசிவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார் (29), விஷால் (24), நவீன்ராஜ் (27), விக்னேஷ் (18) ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள உதயா என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை வழக்கில் துரிதமாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

MUST READ